Rahu_kalam_logo

பொதுவாக ஜோதிடங்களில் பல விதிமுறைகளை நம் முன்னோர்கள் கையாண்டு வந்தனர் அந்த வகையில் இன்று நாம் ராகு காலம் என்பதைப்பற்றி இப்பொழுது பார்ப்போம். ராகு காலம் என்றால் என்ன?. அதற்கான விளக்கத்தை இப்போது பார்க்கலாம் ..

ஆன்மீகம் ரீதியாகவும் சரி, ஜோதிட ரீதியாகவும் சரி, ராகு காலம் என்பது கெட்ட காலமாகவே நம் முன்னோர்கள் கருதினார்கள். மேலும் ராகு காலத்தை கெட்ட சகுனமாகவே பார்த்து வந்தனர். இந்த ராகு காலத்தில் சில விஷயங்கள் செய்யக்கூடாதெனவும் அறிவுறுத்தியிருந்தனர். உதாரணமாக, ஒரு புதிய வேலையை தொடங்குதல், ஒரு புதிய முயற்சி, திருமணம் பேச்சு வார்த்தை, தொழில் அல்லது வேலை வாய்ப்பு, போன்றவை செய்யக்கூடாது என்று வலியுறுத்துகின்றனர். காரணம், ராகு காலத்தில் செய்யப்படும் வேலைகள் அனைத்தும் தடைப்படுவதால் அந்த காலத்தை கெட்ட காலமாக கருதுகிறார்கள்.

ஒவ்வொரு கிரங்களும், ஒவ்வொரு காலங்களில் சுழன்று, அந்தந்த கிரகங்களின் பரிமாற்றத்தில், அனைத்து கிரகங்களுக்கும் ஒரு நிலையான நேரம் உள்ளது. அவ்வாறு ராகுவிற்கு உரிய காலம் தான், இந்த ராகு காலம். இந்த ராகு காலமானது காலை 6.00 மணியளவில், சூரிய உதயத்திலிருந்து, மாலை 6.00 மணியளவில் சூரிய அஸ்தனமனம் வரை செயல்படுகிறது. அதனால் இராகு காலம் இரவில் நடக்காது.