Rahu Kalam Today

Wednesday Timings

Event Timing
Rahu Kaalam 10:30 AM to 12:00 PM
Yema Kandam 07:30 AM to 09:00 AM
Kuligai 03:00 PM to 04:30 PM
Nalla Neram AM 06:00 AM to 07:30 AM
Nalla Neram PM 01:30 PM to 03:00 PM

ராகு காலம் என்றால் என்ன? | What is Rahu Kalam?

பொதுவாக ஜோதிடங்களில் பல விதிமுறைகளை நம் முன்னோர்கள் கையாண்டு வந்தனர் அந்த வகையில் இன்று நாம் ராகு காலம் என்பதைப்பற்றி இப்பொழுது பார்ப்போம். ராகு காலம் என்றால் என்ன?. அதற்கான விளக்கத்தை இப்போது பார்க்கலாம் ..

ஆன்மீகம் ரீதியாகவும் சரி, ஜோதிட ரீதியாகவும் சரி, ராகு காலம் என்பது கெட்ட காலமாகவே நம் முன்னோர்கள் கருதினார்கள். மேலும் ராகு காலத்தை கெட்ட சகுனமாகவே பார்த்து வந்தனர். இந்த ராகு காலத்தில் சில விஷயங்கள் செய்யக்கூடாதெனவும் அறிவுறுத்தியிருந்தனர். உதாரணமாக, ஒரு புதிய வேலையை தொடங்குதல், ஒரு புதிய முயற்சி, திருமணம் பேச்சு வார்த்தை, தொழில் அல்லது வேலை வாய்ப்பு, போன்றவை செய்யக்கூடாது என்று வலியுறுத்துகின்றனர். காரணம், ராகு காலத்தில் செய்யப்படும் வேலைகள் அனைத்தும் தடைப்படுவதால் அந்த காலத்தை கெட்ட காலமாக கருதுகிறார்கள்.

ஒவ்வொரு கிரங்களும், ஒவ்வொரு காலங்களில் சுழன்று, அந்தந்த கிரகங்களின் பரிமாற்றத்தில், அனைத்து கிரகங்களுக்கும் ஒரு நிலையான நேரம் உள்ளது. அவ்வாறு ராகுவிற்கு உரிய காலம் தான், இந்த ராகு காலம். இந்த ராகு காலமானது காலை 6.00 மணியளவில், சூரிய உதயத்திலிருந்து, மாலை 6.00 மணியளவில் சூரிய அஸ்தனமனம் வரை செயல்படுகிறது. அதனால் இராகு காலம் இரவில் நடக்காது.

ராகுவின் குணங்கள்:
ராகு ஒரு தன்னிறைவு, ஆழமான சிந்தனை, மோகம் மற்றும் உலகியலான ஆசைகள் ஆகியவற்றுடன் தொடர்புடையது. இது மனிதர்களின் குணநலன்களையும், அவர்களின் வாழ்க்கை மரபுகளையும் பாதிக்கக்கூடியது. ராகுவின் இடங்கள் மாற்றங்களுக்கும் முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கின்றன, ஆனால் அவற்றின் ஆச்சரியமான விளைவுகளால் நம்மை சோதிக்கவும் செய்யலாம்.

ராகு தோஷம்:
ஜாதகத்தில் ராகு சரியாக இருக்காமல் இருந்தால், அது நம் வாழ்க்கையில் தடைகளையும் துயரங்களையும் உருவாக்கக்கூடும். இது ராகு தோஷமாகக் கூறப்படும். ராகு தோஷம் நீங்க தனிச்சில பரிகாரங்களை செய்ய வேண்டும்.

ராகு காலம்:
ராகு காலம் என்பது தினசரியில் ஒரு குறிப்பிட்ட நேரம், இதனை யாகங்கள் மற்றும் முக்கிய பணிகளுக்கு தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. இந்த நேரம் அனர்த்தங்களுக்கும், சிக்கல்களுக்கும் ஏற்கனவே நம்பிக்கையாகக் கருதப்படுகிறது.

ராகு பரிகாரங்கள்:
ராகுவின் தாக்கத்தைக் குறைக்க:

  • துர்கை அல்லது காளி தேவியை பூஜிக்கலாம்.
  • கருப்பு நிற உடைகள் அணிந்து, கருப்பு உளுந்து அல்லது சனிக்கிழமை பறவைகளுக்கு உணவளிக்கலாம்.
  • நாக வழிபாடு முக்கியமாக கருதப்படுகிறது.

ராகுவின் ஆசியால் வாழ்க்கையில் சரியான நேரத்தில் நல்ல முன்னேற்றமும் ஏற்படலாம். எனவே ராகுவின் சிறப்பை சரியாக அறிந்து அதை ஏற்றுக்கொள்வது அவசியம்

ராகு காலம், எம கண்டம் – எதை வைத்து கணக்கீடு செய்யப்படுகிறது?

ஒரு நாளைக்கு ஒன்றரை மணி நேரம் வீதம், காலை 7:30 மணிக்குத் தொடங்கி, மாலை 6:30 வரை, கீழ்க் கண்ட வரிசையில் கணக்கீடு செய்யப்படுகின்றன.

Days Timings
Sunday / ஞாயிற்றுக்கிழமை : 4:30 PM – 6:00 PM
Monday / திங்கட்கிழமை : 7:30 AM – 9:00 AM
Tuesday / செவ்வாய்க்கிழமை : 3:00 PM – 4:30 PM
Wednesday / புதன்கிழமை : 12:00 PM – 1:30 PM
Thursday / வியாழக்கிழமை : 1:30 PM – 3:00 PM
Friday / வெள்ளிக்கிழமை : 10:30 AM – 12:00 PM
Saturday / சனிக்கிழமை : 9:00 AM – 10:30 AM